sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வல்வெட்டித்துறையில் இலங்கை அதிபருக்கு வரவேற்பு

/

வல்வெட்டித்துறையில் இலங்கை அதிபருக்கு வரவேற்பு

வல்வெட்டித்துறையில் இலங்கை அதிபருக்கு வரவேற்பு

வல்வெட்டித்துறையில் இலங்கை அதிபருக்கு வரவேற்பு

7


ADDED : ஜன 31, 2025 09:51 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:51 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, இன்று வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உட்பட்டது வல்வெட்டித்துறை. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர். இங்கு இலங்கை அதிபர் அனுரா இன்று வருகை தந்தார்.

அங்கு தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழர்கள், சிங்களர்கள், பவுத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொண்டாடும் வகையிலான தேசிய திருவிழா அக்டோபர் மாதம் நடத்தப்படும்.

நமது அனைத்து சமுதாயங்களின் கலாசாரம், உணவு, வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில் இந்த விழா இருக்கும்.

நாம் ஒருவருக்கொருவர் தள்ளியிருந்தாலும், நமது குழந்தைகள் தள்ளியிருப்பதற்கு விட்டு விடக்கூடாது. நமது தலைமுறை போர் செய்திருக்கலாம்; நம் குழந்தைகளின் தலைமுறை போரிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து செயல்படும் நாடாக நம் நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அனுரா பேசினார்.






      Dinamalar
      Follow us