sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

/

இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

24


UPDATED : செப் 22, 2024 10:37 PM

ADDED : செப் 22, 2024 04:45 AM

Google News

UPDATED : செப் 22, 2024 10:37 PM ADDED : செப் 22, 2024 04:45 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் விருப்ப ஓட்டுகளில் யாருக்கும் 50 சதவீதம் கிடைக்காத நிலையில், இரண்டாம் விருப்ப ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தது தேர்தல் ஆணையம்.



தெற்காசியாவில், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத்தீவு, மேற்கு நாடுகளுக்கு செல்லும் கடல் வழியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு அருகே அமைந்திருப்பதாலும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இருப்பதாலும், சீனாவும் தளம் அமைக்க ஆர்வம் காட்டும் நாடாக இலங்கை உள்ளது.

இப்படி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, 30 ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிந்த பிறகு, பேராசை பிடித்த ராஜபக்சே குடும்பத்தினரால் நாடு சந்தித்த சிரமங்கள் ஏராளம்.

அவற்றை கடந்து, இப்போது புதிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.

முதல் விருப்ப ஓட்டு எணணிக்கை முடிவில், அனுரா 39 சதவீதம் ஓட்டுகளும், சஜித் 34 சதவீதம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இரண்டாம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை முடிவில், அனுராவுக்கு 42.31 சதவீதம் ஓட்டுகளும், சஜித்துக்கு 32.76 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்திருந்தன.இதன் அடிப்படையில் அனுரா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் அதிபர் பதவியை கைப்பற்றிய முதல் இடதுசாரி என்ற சிறப்பை அனுரா திசநாயகே பெற்றார்.

யார் இந்த அனுரா திசநாயகே!


இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கும் அனுரா குமார திசநாயகே, 56, தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர்.

ஜனதா விமுக்தி பெரமுனா (தமிழில், மக்கள் விடுதலை முன்னணி என்று பொருள்) இலங்கையில் செயல்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி. அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்த கட்சி, இப்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவரான அனுரா குமார திசநாயகே, 1968ல் அனுராதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர். 1995ல் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். 1987 முதலே ஜனதா விமுக்தி பெரமுனாவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1995ல் சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

அமைச்சராக இருந்தவர்


2000 ஆண்டு முதல் எம்.பி.,யாக இருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி., அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார்.

2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறாடா ஆகவும் இருந்தவர். 2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார். அதன் வேட்பாளராக, அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் ஓட்டுக்களே கிடைத்தன.

ஐ.எம்.எப்., நிபந்தனைக்கு எதிர்ப்பு


கோத்தபயா ராஜபக்சே அதிபராக தேர்வான நிலையில், கோவிட் தொற்று ஏற்பட்டது; கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கோத்தபயா அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களில் அனுராவும் ஒருவர்.

பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அதிபர் ரணில் மேற்கொண்ட ஐ.எம்.எப்., உதவி திட்டத்தை அனுரா குறை கூறி வருகிறார். ஐ.எம்.எப்., கடும் நிபந்தனைகளை பேசி தளர்த்த வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

...........






      Dinamalar
      Follow us