பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்
பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்
UPDATED : மே 31, 2024 10:23 PM
ADDED : மே 31, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்லின்: ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்தது.
ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினார். சிலர் அலறியடித்து கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு வந்து இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடக்கிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.