கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் 'விசிட்': தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் 'விசிட்': தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
UPDATED : ஆக 31, 2024 10:38 AM
ADDED : ஆக 31, 2024 09:05 AM

வாஷிங்டன்: கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் , மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவர், முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'
ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தின் முதலீடு செய்யுமாறு கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். தமிழகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்' என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஏ.ஐ., ஆய்வகம்
சென்னையில் செயற்கை ஏ.ஐ., ஆய்வகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.