பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: 3 துாதரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: 3 துாதரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்
ADDED : மே 29, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்சிலோனா: மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினர் இடையே கடந்த ஆண்டு அக்., 7ல் துவங்கிய போரில் 36,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன. இது அந்நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே புயலை கிளப்பியது.
அந்த மூன்று நாடுகளை சேர்ந்த துாதர்களை இஸ்ரேல் திரும்ப அழைத்துக் கொண்டது. இந்த சம்பவம், ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.