பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
UPDATED : ஏப் 24, 2025 08:41 PM
ADDED : ஏப் 24, 2025 08:39 PM

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார். இந்திய மண்ணில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தியது.
இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டறிந்தார். குற்றவாளிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் நீதியின் முன் நிறுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்திய மக்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இஸ்ரேல் ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலின் காட்டுமிராண்டித்தனமான தன்மையை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.