சூடான் துணை ராணுவப்படை தாக்குதல் 10 பெண்கள் உட்பட 28 பேர் பலி
சூடான் துணை ராணுவப்படை தாக்குதல் 10 பெண்கள் உட்பட 28 பேர் பலி
ADDED : பிப் 25, 2026 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்ட்டூம்: வட ஆப்ரிக்க நாடான சூடானில், அதிகாரப் போட்டி காரணமாக ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எப்., படைக்கும் இடையே 2023ம் ஆண்டு முதல், மோதல் இருந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், வடக்கு டார்பூர் மாகாணத்தில் உள்ள மிஸ்டெரிஹா என்ற கிராமத்தின் மீது, ஆர்.எஸ்.எப்., வீரர்கள், ட்ரோன் தாக்குதலை நடத்தினர். அவர்கள் அங்கு, ரிசிகாட் அரபு பழங்குடியினத் தலைவரின் மாளிகையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த சுகாதார மையத்தின் மீதும் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 10 பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மிஸ்டெரிஹாவைக் கைப்பற்றியதன் மூலம் டார்பூர் முழுதும், ஆர்.எஸ்.எப்., கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

