தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சூடான் துணை ராணுவ படை தாக்குதல் 3 நாட்களில் 6,000 பேர் கொலை

 சூடான் துணை ராணுவ படை தாக்குதல் 3 நாட்களில் 6,000 பேர் கொலை

 சூடான் துணை ராணுவ படை தாக்குதல் 3 நாட்களில் 6,000 பேர் கொலை


ADDED : பிப் 16, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெய்ரோ:: வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின்: டார்பூர் பிராந்தியத்தில் உள்ள எல் பாஷர்: நகரில்: வெளியிட்டுள்ளது.: ஐ.நா., மனித உரிமைகள் அலுவலகம், 29 பக்க அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில், கடந்தாண்டு அக்டோபர் 25 முதல் 27 வரையிலான மூன்று நாட்களில் எல் பாஷர் நகருக்குள் 4,400 பேரும், தப்பி ஓட முயன்ற 1,600 பேர் என மொத்தம் 6,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, எல் பாஷர் பல்கலை விடுதியில் தஞ்சமடைந்த 1,000 பேர் மீது ஆர்.எஸ்.எப்., வீரர்கள் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில், கிட்டத்தட்ட 500 பேர் உடல் சிதறி பலியானதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், ''இது உலகையே உலுக்கிய கொடூர கொலை. இது போர் குற்றங்களுக்கு இணையானது. இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சர்வதேச நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us