ADDED : மார் 18, 2026 03:19 AM
அபுஜா: நைஜீரியாவில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களில், 23 பேர் பலியாகி உள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இந்த மாதத் துவக்கத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், வடகிழக்கு மாகாணமான போர்னோ முழுதும் உள்ள ராணுவத் தளங்கள் மீது, பல தாக்குதல்களை நடத்தினர். இதில், ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதோடு, ஆயுதங்களும் கொள்ளை அடைக்கப்பட்டன.
இந்நிலையில், போர்னோவின் தலைநகரான மைடுகுரியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை நுழைவாயில், தபால் அலுவலகம் மற்றும் இரண்டு உள்ளூர் சந்தைகளிலும் நேற்று முன்தினம் அதிகாலை, குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயுதக் குழுக்களின் கோட்டையான சம்பிசா வனப்பகுதியில் நடைபெறும் தீவிர ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போர்னோ மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
