அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு
UPDATED : செப் 03, 2024 09:28 AM
ADDED : செப் 03, 2024 08:49 AM

வாஷிங்டன்: கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை, சட்ட விரோதமாக நுழையுபவர்கள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. ஆய்வில் வெளியான விபரங்கள் பின்வருமாறு: கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இதே காலகட்டத்தில் 47 சதவீதம் சட்டவிரோத நுழைவு அதிகரித்துள்ளது.
1.5% சதவீதம்
அமெரிக்கா- கனடா எல்லையானது உலகின் மிக நீளமான பாதுகாப்பற்ற எல்லையாகும். அமெரிக்க மக்கள் தொகையில், இந்திய அமெரிக்கர்கள் 1.5% உள்ளனர். அனைத்து வருமான வரிகளிலும் 5 முதல் 6 சதவீதம் செலுத்துகின்றனர். அதேபோல், இங்கிலாந்தில் துறைமுகத்தில் தஞ்சம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிககரித்துள்ளது. கடந்த 2021ல் 1,170 பேர் குடிபெயர்ந்துள்ளனர். நடப்பாண்டு இதுவரை 475 பேர் புகலிடம் கோரி பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் சொல்வது என்ன?
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜோ பைடன் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். நான் ஆட்சி பிறகு இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அதேநேரத்தில், சட்டவிரோதமாக குடிபெயர்வோர்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. அதிபர் ஜோ பைடன் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.