சூரினாமில் கத்திக்குத்து தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
சூரினாமில் கத்திக்குத்து தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
UPDATED : டிச 29, 2025 03:09 AM
ADDED : டிச 29, 2025 03:08 AM

பாரமரிபோ: சூரினாம் நாட்டில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆவேசமடைந்த நபர் ஒருவர், ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான சூரினாம் நாட்டின் தலைநகரான பாரமரிபோவின் புறநகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசாரையும், கத்தி வைத்திருந்த நபர் தாக்க முயற்சித்தார். அப்போது பதிலுக்கு போலீசார் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த நபர் கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தென் அமெரிக்க பிராந்தியத்தில் குற்றங்கள் குறைவாக நடக்கும் சூரினாமில் இந்த கொலை நிகழ்ந்திருப்பது, பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

