தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சிரியா ஐ.எஸ்., கைதிகள் இடமாற்றம்

 சிரியா ஐ.எஸ்., கைதிகள் இடமாற்றம்

 சிரியா ஐ.எஸ்., கைதிகள் இடமாற்றம்


ADDED : ஜன 23, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ஐ.எஸ்., கைதிகளை ஈராக்கிற்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு, அகமது அல் ஷரா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், குர்து பழங்குடியினத்தவரின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயக படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு மாகாணங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

சமீபத்தில் அரசுப் படைக்கும், ஆயுதக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, சிறையில் இருந்த, 1,500க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தப்பினர்.

இதையடுத்து, 7,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகளை, ஈராக்குக்கு இடமாற்ற அமெரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுவரை 150 ஐ.எஸ்., கைதிகள் ஹசாகா மாகாணத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்திலிருந்து ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us