ஓடுபாதையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி: மும்பையில் பரபரப்பு
ஓடுபாதையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி: மும்பையில் பரபரப்பு
ADDED : ஆக 16, 2025 08:30 PM

மும்பை: இண்டிகோவுக்கு சொந்தமான விமானத்தின் வால்பகுதி , ஓடுபாதையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோவுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321 விமானம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தால் தரையிறங்க முடியவில்லை. இதனால், மீண்டும் மேலே சென்று மீண்டும் தரையிறங்க முயற்சி செய்தது. அப்போது விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது.
தொடர்ந்து விமானம் மேலே பறந்து சென்று பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது. எத்தனை பேர் பயணித்தனர் என்ற தகவலும் இல்லை.
இது தொடர்பாக இண்டிகோ விமானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முயன்ற போது வால்பகுதி தரையில் மோதியது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பரிசோதனை மற்றும் பராமரிப்புக்கு பிறகு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு விமானம் பயன்படுத்தப்படும்.
பயணிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த சம்பவம் காரணமாக சேவையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.