ஆப்கானில் ஹிந்து சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான்கள் ஜரூர்
ஆப்கானில் ஹிந்து சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான்கள் ஜரூர்
ADDED : ஏப் 10, 2024 08:38 PM

காபூல்: ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர்.
இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் கல்சா என்ற ஹிந்து எம்.பி., குரல் கொடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என பேசினார்.
இதையடுத்து தற்போதைய தலிபான் ஆட்சி நிர்வாகத்தின் நீதித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைத்து ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்கள் இனம் காணப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடயே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாஹீன் தெரிவித்தார். .

