ADDED : அக் 11, 2025 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பயங்கரவாதிகள் ஒழிப்பு என்ற பெயரில், காபூலில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை. ஒரு இன்ச் நிலம் கூட அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. 2021ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறிவிட்டது. இந்த அணுகுமுறையின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று பாகிஸ்தான் அரசை எச்சரிக்க விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.