ADDED : ஜூன் 30, 2026 04:04 AM

டெஹ்ரான்: மீண்டும் மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பு தாக்குதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து கத்தாரில் பேச்சு நடத்தவும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுஉள்ளன.
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீறி, சில நாட்களாக பரஸ்பரம் இரு தரப்பும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.
ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், தாக்குதல்களை கைவிடவும், ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வணிக கப்பல் போக்குவரத்து தடையின்றி நடப்பதற்கும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுஉள்ளன.
இது தொடர்பாக, மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேச இரு தரப்பும் முன்வந்துஉள்ளன.
