பிணையக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை
பிணையக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை
UPDATED : ஆக 22, 2025 02:54 AM
ADDED : ஆக 22, 2025 02:51 AM

ஜெருசலேம்:
மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை
ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான
பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023
அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251
க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு
பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.
இதில்
62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 75 சதவீத
காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன. கடந்த சில
தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல்
ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீதமுள்ள
பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து, இஸ்ரேலின்
நிபந்தனையை ஏற்றுக்கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு
வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என்றார்.