போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்; இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்; இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் பலி
ADDED : அக் 29, 2025 07:07 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.
தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 2023ல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68,527 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க தொடங்கி இருக்கிறது.

