தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இத்தாலி ராணுவ தளத்துக்கு குறி!

இத்தாலி ராணுவ தளத்துக்கு குறி!

இத்தாலி ராணுவ தளத்துக்கு குறி!


ADDED : மார் 13, 2026 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரில், ஈராக்கில் குர்திஷ் நகரமான எர்பிலில் உள்ள, ஐரோப்பிய நாடான இத்தாலியின் ராணுவ தளம், ஈரான் நடத்திய தாக்குதலில் தாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் இத்தாலி வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவர்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. ஐரோப்பிய நாடுகளின் ராணுவ தளங்களும் இப்போது ஆபத்தில் உள்ளன.



இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகள் வீச்சு


ஈரான் ஆதரவு பெற்ற, லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, இஸ்ரேல் நோக்கி தொடர்ச்சியாக ஏவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் ஹைபா, கலிலீ, கோலான் ஹைட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு ஓடினர். இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' ஏவுகணை தடுப்பு அமைப்பு பெரும்பாலானவற்றை வழிமறித்ததால், பெரிய அளவிலான உயிரிழப்புகள் இல்லை. இதே நேரத்தில் ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை செலுத்தியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us