வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்; அமெரிக்கா உறுதி!
வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்; அமெரிக்கா உறுதி!
ADDED : ஏப் 02, 2025 07:29 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (ஏப்ரல் 02) (இந்திய நேரப்படி - நாளை அதிகாலை) டிரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்த உடன் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். இன்று (ஏப்ரல் 02) டிரம்ப் பரஸ்பர வரிகளை அறிவிக்கிறார். அவர் அறிவித்த உடன் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஏப்ரல் 2ம் தேதி அதிபர் டிரம்ப் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்பார். அவர் அறிவித்த உடன் அமலுக்கு வரும்.
ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் வாகன துறையில் புதிய வரி உயர்வு அமலுக்கு வரும்.
டிரம்ப் தற்போது தனது வர்த்தக மற்றும் கட்டணக் குழுவுடன் இருக்கிறார். அமெரிக்க மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். நிச்சயமாக, அதிபர் எப்போதும் ஒரு முடிவை எடுக்கத் தயாராக இருக்கிறார்.
கடந்த கால தவறுகளைச் சரிசெய்வதிலும், அமெரிக்கத் தொழிலாளர்கள் நியாயமான ஒப்பந்தத்தைப் பெறுவதை உறுதி செய்யவும் அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். இவ்வாறு கரோலின் லீவிட் கூறினார்.

