வாகனங்களுக்கான வரி உயரும்: உற்பத்தியை அதிகரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!
வாகனங்களுக்கான வரி உயரும்: உற்பத்தியை அதிகரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!
ADDED : ஜூன் 13, 2025 07:39 AM

வாஷிங்டன்: ''அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க, வாகனங்களுக்கான வரி விரைவில் உயர்த்தப்படும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
தற்போது அவர் உற்பத்தியை அதிகரிக்க, வாகனங்களுக்கான வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க, வாகனங்களுக்கான வரி விரைவில் உயர்த்தப்படும். இதனால் வாகன உற்பத்தியாளர்கள் ஒரு புதிய ஆலைகளை கட்ட வாய்ப்பு உருவாகும்.
நாங்கள் வரிகளை விதிக்கவில்லை என்றால் அவர்கள் (வாகன உற்பத்தியாளர்கள்) 10 காசுகள் கூட முதலீடு செய்திருக்க மாட்டார்கள். தற்போது அமெரிக்காவில் எஃகு உற்பத்தி சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, டிரம்பின் இந்த திட்டத்தால், இந்திய வாகனத்துறைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.