டெஹ்ரான் விமான நிலையம் 2 மாதங்களுக்கு பின் திறப்பு
டெஹ்ரான் விமான நிலையம் 2 மாதங்களுக்கு பின் திறப்பு
ADDED : ஏப் 26, 2026 12:06 AM
டெஹ்ரான்: ஈரானில் போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின் டெஹ்ரான் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரான் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது.
இந்த மோதலால் ஈரானின் வான்பரப்பு முற்றிலும் மூடப்பட்டது. சர்வதேச விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்கள் ஈரான் வழியாக பயணிப்பதை தவிர்த்தன.
பாக்., தலையீட்டால், கடந்த 8ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையம் 60 நாட்களுக்குப் பின், நேற்று அதிகாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
துருக்கியின் இஸ்தான்புல், ஓமனின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் மதீனா ஆகிய நக ரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
