sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம்: ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது

/

வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம்: ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது

வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம்: ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது

வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம்: ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது


UPDATED : டிச 21, 2025 03:28 PM

ADDED : டிச 21, 2025 12:43 AM

Google News

UPDATED : டிச 21, 2025 03:28 PM ADDED : டிச 21, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக கொன்றது. இந்த சம்பவத்தில், இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அதன் பின் முக்கிய மாணவர் தலைவராக அறியப்பட்டார்.

இவர் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் - இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி போன்றவற்றுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஷெரீப் ஓஸ்மான் சுடப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி 18ம் தேதி இறந்தார். இந்த செய்தி பரவியதும், வங்கதேச தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் நேற்று முன்தினம் கலவரம் மூண்டது.

கடைகள், வணிக வளாகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள், முன்னாள் அமைச்சரின் இல்லங்கள் தாக்கப்பட்டன.

இந்த கலவரத்தை பயன்படுத்தி மைமென்சிங் நகரில் ஜவுளி துறையில் பணியாற்றி வந்த திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து தொழிலாளியை ஒரு கும்பல் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி கடுமையாக தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உடலை வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் டாக்கா - மைமென்சிங் தேசிய நெடுஞ்சாலைக்கு சந்திர தாஸ் உடலை துாக்கி வந்து போட்டு மீண்டும் தீ வைத்தனர்.

இதை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மொபைலில் படம் பிடித்தனர். ஒருவரும் இந்த செயலைக் கண்டிக்கவோ தடுக்கவோ முன் வரவில்லை. அடிக்கடி ஹிந்து சிறுபான்மையினர் மீது வங்கதேசத்தில் இது போன்ற வன்முறை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகிறது.

திபு சந்திர தாஸ் கொலையில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி துாதரகம் வாயிலாக மத்திய அரசு வங்கதேசத்துக்கு அழுத்தம் தந்தது. அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திபு சந்திர தாஸ் கொலையில் தொடர்புடையவர்கள் என ஏழு பேரை வங்கதேச போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கைது எண்ணிக்கை உயரக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஓஸ்மான் ஹாதியின் உடல் நேற்று டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதிச் சடங்கில், முகமது யூனுஸ் உட்பட அரசு தரப்பிலும் பலர் கலந்து கொண்டனர். நாடு முழுதும் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்திய சொத்துக்களுக்கு பாதுகாப்பு

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலைக்கு பின் நடந்த கலவரத்தில் வன்முறை கும்பல் இந்திய துாதரகம், விசா மையங்களை குறிவைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ தளபதிகளும் பேச்சு நடத்தினர் . வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளன. பதற்றங்கள் இருந்த போதிலும் நாங்கள் பாதுகாப்புக்கு உறுதிபூண்டுள்ளோம் என, வங்கதேச தரப்பில் கூறப்பட்டுள்ளது.



150 கணினி கொள்ளை

வங்கதேசத்தில் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த கலவரத்த்தில், டாக்காவில் உள்ள 'பிரைம் அலோ' மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' ஆகிய பத்திரிகை அலுவலகங்கள் வன்முறை கும்பலால் சூறையாடப்பட்டன. அப்போது 150 கணினிகள், மின்னணு உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.








      Dinamalar
      Follow us