சிலியில் காட்டுத்தீயில் சிக்கி 51 பேர் உயிரிழப்பு; அவசரநிலை பிரகடனம்
சிலியில் காட்டுத்தீயில் சிக்கி 51 பேர் உயிரிழப்பு; அவசரநிலை பிரகடனம்
ADDED : பிப் 04, 2024 10:56 AM

சாண்டியாகோ: சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிலி நாட்டில் வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயில் கருகி 51 பேர் உயிரிழந்தனர் . பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார். காட்டுத் தீயில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத் தீ பரவல் குறைவு என்றாலும் உயிரிழப்பு அதிகம் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார். அங்கு, அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது.