மிச்சிகனில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பல சந்தேக நபர்கள் கைது; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்பிஐ 'திடுக்' தகவல்
மிச்சிகனில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பல சந்தேக நபர்கள் கைது; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்பிஐ 'திடுக்' தகவல்
ADDED : அக் 31, 2025 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: மிச்சிகனில் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அமெரிக்க புலனாய்வு அமைப்பாளர் எப்பிஐ இயக்குனர்  காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, காஷ் படேல் கூறியதாவது: இன்று எப்பிஐ அதிகாரிகள் மிச்சிகனில்வார இறுதியில் வன்முறைத் தாக்குதலைத் திட்டமிட்ட பலரைக் கைது செய்து, பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்தது.
மேலும் விவரங்கள் விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும். எப்பிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எல்லா இடங்களிலும்  24 மணி நேரமும் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

