பலூசிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 102 பாக். வீரர்கள் பலி
பலூசிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 102 பாக். வீரர்கள் பலி
UPDATED : ஆக 27, 2024 07:37 PM
ADDED : ஆக 27, 2024 06:27 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்துக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இன்று ராஸ்பெல்லா என்ற இடத்தில் ராணுவ முகாம மீது ஆயுதம் தாங்கிய படையினர் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலுக்கு பி.எல்.ஏ. எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.