நைஜீரியா ராணுவ தளபதியை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
நைஜீரியா ராணுவ தளபதியை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
ADDED : நவ 19, 2025 07:45 AM

அபுஜா: நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தின் மூத்த தளபதி, பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ்., உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. போ கோ ஹராமில் இருந்து பிரிந்த ஒரு குழு ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் இணைந்து, ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி., என்ற பெயரில் தனியாக இயங்கி வருகின்றது. இந்த அமைப்பினர், ராணுவ இலக்குகளையே அதிகம் தாக்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும், 15 முறை ராணுவ முகாம்க ளை தாக்கி, வீரர்களை கொன்று ஆயுதங்களை கொள்ளை அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாதிகள், ராணுவ தளபதி எம். உபா என்பவரை கடத்தி சென்று சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர்னோ மாகாணத்தில் உள்ள வாஜிரோகோ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவரைக் கொன்றதாக ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி., பயங்கரவாத அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இதை நைஜீரிய ராணுவம் மறுத்துள்ளது.

