தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/தாய்லாந்து வெள்ளத்தில் 162 பேர் பலி; நிவாரண பணி தோல்விக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்

தாய்லாந்து வெள்ளத்தில் 162 பேர் பலி; நிவாரண பணி தோல்விக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்

தாய்லாந்து வெள்ளத்தில் 162 பேர் பலி; நிவாரண பணி தோல்விக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்


ADDED : நவ 29, 2025 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக்: வெள்ள நிவாரணம், மீட்பு பணிகளில் தோல்வி அடைந்து விட்டதாக மக்களிடம் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் விரகுல் மன்னிப்பு கோரியுள்ளார்.

தாய்லாந்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 162 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 126 பேர் பலியாகி உள்ளனர். 14 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 38 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மழை வெள்ளத்தின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு நிர்வாகம் முனைப்புடன் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் விரகுல் பார்வையிட்டார். அப்போது நிவாரண பணிகளில் குறைபாடுகள் உள்ளன, அரசு நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:

நிவாரண பணிகளில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us