ADDED : டிச 13, 2025 05:38 AM

பாங்காக்: அடுத்தாண்டு துவக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தாய்லாந்தின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2023ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி அமைந்தது.
அரசியல் குழப்பங்களால், கடந்த செப்.,ல் அனுடின் சார்ன்விரகுல் பிரதமரானார். அப்போதே விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடத்தும் வகையில், பார்லிமென்டை கலைக்க பார்லி.,யில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் வஜிரலோங்கோன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தற்போதைய பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் அறிவித்தார். வரும் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
