sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்; தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

/

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்; தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்; தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்; தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

4


ADDED : டிச 14, 2025 09:49 AM

Google News

ADDED : டிச 14, 2025 09:49 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: கம்போடியாவுடன் 5 நாட்களாக தொடரும் எல்லை மோதலில் தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்வதால், அமெரிக்கா மத்தியஸ்தம் எந்த பலனையும் கொடுக்கவில்லை.

கம்போடியா - தாய்லாந்து இடையிலான எல்லை மோதல் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ஜூலையில் இரு நாடுகளும் போர் தொடுத்தன. இரு தரப்பிலும் 43 பேர் பலியாகினர். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், கடந்த 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் சண்டை துவங்கியது. ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எல்லையோரம் கிராமங்களில் வசிக்கும் நுாற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், அப்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். ஆனால், இரு நாட்டு எல்லைகளிலும் போர் தீவிரமாக நடக்கிறது.

தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், கம்போடியா பி.எம்., 21 ராக்கெட்டுகளை ஏவியதாகவும் மாறி மாறி குற்றஞ் சாட்டுகின்றன. 5 நாட்களாக தொடரும் மோதலில் தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தம் தோல்வி அடைந்துள்ளது.






      Dinamalar
      Follow us