உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 17, 2026 02:16 AM
அ நிறம் | அளவு
பாங்காக்: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், லேம் சபாங் துறைமுகத்திற்கு 21 கன்டெய்னர்களில், 'மெட்டல் ஸ்கிராப்' எனப்படும் உலோகக் கழிவுகள் கொண்டு வரப்பட்டன.
வட அமெரிக்க நாடான ஹைட்டி தீவிலிருந்து போலியான பெயரில் கொண்டு வரப்பட்ட இக்கழிவுகளை தாய்லாந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, அமெரிக்காவின் 284 டன் 'இ - வேஸ்ட்' எனப்படும் மின்னணு கழிவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 'இது குப்பை கொட்டும் இடம் அல்ல' என்று, அவற்றை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்ப தாய்லாந்து முடிவு செய்துள்ளது.
