பிரதமர் மோடியின் கருத்துக்கு வங்கதேச அரசு கண்டனம்
பிரதமர் மோடியின் கருத்துக்கு வங்கதேச அரசு கண்டனம்
ADDED : டிச 18, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா: பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல் டிச.16ல் நடந்த போரில் நம் ராணுவம் வெற்றி பெற்றதையடுத்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. இதன் 53வது ஆண்டு தினத்தையொட்டி நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பிரதமர் மோடி, 'இது, இந்தியாவின் வரலாற்று வெற்றி' என குறிப்பிட்டிருந்தார்.
இதை சுட்டிக்காட்டி வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் 'இது வங்கதேசத்தின் விடுதலைப் போர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா ஒரு கூட்டாளியாக மட்டுமே இருந்தது. அதற்கு மேல் அதன் பங்கு எதுவும் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.