ADDED : ஏப் 28, 2025 10:15 AM

புதுடில்லி : நிர்ணயிக்கப்பட்ட கெடுவில் இந்தியாவில் இருந்து வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷமீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் டென்ஷன் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு சார்க் விசாவில் வந்துள்ளவர்கள் ஏப்.29ம் தேதிக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு மருத்துவம், பொதுநிகழ்வு, படிப்பு, சுற்றுலா என வந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை 510 பேர் அட்டாரி எல்லை வழியாக சென்றுள்ளனர். இது போல் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியர்களும் இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
ரூ. 3 லட்சம் அபராதம்
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற ஏப்.29ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு செல்லாமல் இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ. 3 லட்சம் அபராதமும் வழங்க முடியும் . சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கலாம். இந்த அளவுக்கு சட்டத்தில் வழிவகை இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.