புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்
புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்
ADDED : ஜூலை 15, 2025 06:57 AM
லண்டன்: லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், சில வினாடிகளில் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து, 'ஈஸி ஜெட்' நிறுவனத்தின் சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் நகருக்கு நேற்று புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் நேரத்தில், இந்த விமானம் வெடித்து சிதறியது. இதில் அந்த விமானம் முழுதும் எரிந்தது.
இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், அவர்களுடைய நிலை குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த சிறிய விமானம் 36 அடி நீளம் உடையது. ஒவ்வொரு வாரமும் 20 வழித்தடங்களில் 122 விமானங்களை ஈஸி ஜெட் இயக்குகிறது. இந்த விமான விபத்தைத் தொடர்ந்து, பல விமான சேவையை, அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.

