sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

/

ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

60


UPDATED : ஏப் 13, 2025 03:23 PM

ADDED : ஏப் 13, 2025 01:48 PM

Google News

UPDATED : ஏப் 13, 2025 03:23 PM ADDED : ஏப் 13, 2025 01:48 PM

60


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜார்ஜியா: ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஜார்ஜியா. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்து மக்கள் வசித்து வருகின்றனர்.

ஹிந்து மதத்திற்கு புகழாரம்


இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.

' சமீபத்திய ஹிந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்' என்றும் சபையில் தெரிவித்தனர். உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும். தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து ஹிந்து மதம் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.

Image 1405100

ஹிந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை ஜார்ஜியா பெறுகிறது. இதனை ஹிந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.


முஸ்லிமுக்கு ஆதரவாக சட்டம்


முஸ்லிம் மதம் குறித்து அவதூறு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அளவுக்கு ஆப்பிரிக்க சட்டத்தில் இடம் உள்ளது.








      Dinamalar
      Follow us