திடீர் பல்டி ஏன்? சீனாவின் ஆதரவை நாடிய இலங்கை தமிழர் கட்சி
திடீர் பல்டி ஏன்? சீனாவின் ஆதரவை நாடிய இலங்கை தமிழர் கட்சி
UPDATED : ஆக 13, 2024 11:24 AM
ADDED : ஆக 13, 2024 10:55 AM

கொழும்பு: எப்போதும் சீனாவை எதிர்க்கும் நிலை கொண்ட இலங்கையில் உள்ள தமிழர் கட்சி, தன் நிலையை மாற்றியுள்ளது இலங்கை அரசியலில் பரவலாக பேசப்படுகிறது.
இலங்கையில் பிரபலமான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன், சாணக்கிய ராஜபுத்திரன் ராஜமாணிக்கம், இலங்கைக்கான சீன தூதர் கியூ ஷென்கோங்கை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் இலங்கையில் நிலவும் தற்போதைய நிலவரம், வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் நலன் குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த பேச்சு பலன் உள்ளதாக இருந்ததாக தமிழ் எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.
சீனாவே வீட்டுக்கு போ
கடந்த 2022 ல் இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர், 'சீனா ராஜபக்சேவுக்கு மட்டுமே நண்பராக உள்ளது. இலங்கைக்கு அல்ல' என்று வர்ணித்து இருந்தது. மேலும்' சீனாவே வீட்டுக்கு போ ' என்ற கோஷங்களுடன் பிரசாரத்தை முன்னெடுத்து பெரும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தமிழ் எம்.பி.,க்கள் சீன பிரதிநிதியை சந்தித்தது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.