sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா

/

 வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா

 வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா

 வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா

6


ADDED : டிச 17, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:39 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'பென்டானில்' என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.

பென்டானில் என்பது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்து. இது மருத்துவ உலகில் ஒருபுறம் முக்கிய மருந்தாக உள்ளது. மறுபுறம் தவறாகவும் பயன்படுத்தப்படும்போது, உயிரை பறிக்கும் கொடிய போதைப் பொருளாக மாறுகிறது.

அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரின் மரணத்துக்கு, பென்டானில் போதைப் பொருளை பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இம்மருந்து பெரும்பாலும், தென் அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாகவும், அதற்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வருவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இதையடுத்து, இம்மருந்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிபர் டொனால்டு டிரம்ப், பென்டானிலை ஒரு பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.



இது குறித்து டிரம்ப் கூறியுள்ளதாவது: பென்டானில் ஒரு போதைப் பொருள் என்பதைத் தாண்டி அது ஒரு வேதியியல் ஆயுதம் போன்றது. வெறும் 2 கிராம் பென்டானில் ஒரு மனிதனை கொல்லப் போதுமானது என்பதால், இது பேரழிவு ஆயுதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு குண்டும் செய்யாத சேதத்தை இந்த நச்சு பொருள் செய்து வருகிறது. ஆண்டுக்கு, 2 முதல் 5 லட்சம் மக்கள் இதனால் மரணமடைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

எதற்கு இத்தனை கட்டுப்பாடு


உண்மையில் பென்டானில் என்பது வலி நிவாரணியாக இருந்தாலும், இது ஒரு வலிமையான போதை பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வீரியம் மற்றும் ஆபத்து காரணமாகவே அமெரிக்கா இதை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தியுள்ளது.
பென்டானில் என்பது ஒரு செயற்கை ஓபியாய்டு ஆகும். இது மருத்துவ ரீதியாக, புற்று நோயால் ஏற்படும் கடுமையான வலி மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. இது மார்பினை விட 100 மடங்கும், ஹெராயினை விட 50 மடங்கும் அதிக வீரியம் கொண்டது.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, இதை ஊசி, மாத்திரை அல்லது தோலில் ஒட்டும் பேட்ச் வடிவில் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவ பயன்பாட்டிற்கு அப்பால், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பென்டானில், சந்தையில் விற்கப்படும் மற்ற போதைப் பொருட்களில் மிகக் குறைந்த அளவில் கலக்கப்படுகிறது. இதை பயன்படுத்துபவர்கள், தங்களுக்கு தெரியாமலேயே உயிரிழக்கின்றனர்.
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான உயிரிழப்புகளை இம்மருந்து ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. உயிரை காக்க பயன்படும் மருந்தாக இருந்தாலும், தவறாக பயன்படுத்தும்போது அது ஒரு வெடிகுண்டை விட பயங்கரமான வேதியியல் ஆயுதமாக மாறுகிறது.








      Dinamalar
      Follow us