அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான அதிபர்; இந்நாள் அதிபர் பைடனை, வருங்கால அதிபர் டிரம்ப் விமர்சனம்
அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான அதிபர்; இந்நாள் அதிபர் பைடனை, வருங்கால அதிபர் டிரம்ப் விமர்சனம்
ADDED : ஜன 03, 2025 03:01 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் நியமனம் செய்து முடித்துவிட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலருக்கும் அவர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதம் மற்றும் பிற வன்முறைக் குற்றங்களால் அமெரிக்காவில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. நான் பலமுறை பேரணிகளின் போது கூறியிருந்தேன்.
தற்போது, பைடன் நிர்வாகத்தில் மிகவும் மோசமாகி உள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலைமை மோசமாகி விடும் என நான் கூறிய நேரம் தற்போது வந்துவிட்டது. ஜோ பைடன் அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். அவரும் அவரது கட்சியினரும் நம் நாட்டிற்கு செய்ததை பேரழிவுகளை விரைவில் மறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.