sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போர் கப்பல்களை கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பதிலேயே அதிக குஷி ஏற்படுகிறது: டிரம்ப்

/

போர் கப்பல்களை கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பதிலேயே அதிக குஷி ஏற்படுகிறது: டிரம்ப்

போர் கப்பல்களை கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பதிலேயே அதிக குஷி ஏற்படுகிறது: டிரம்ப்

போர் கப்பல்களை கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பதிலேயே அதிக குஷி ஏற்படுகிறது: டிரம்ப்

13


UPDATED : மார் 10, 2026 09:15 PM

ADDED : மார் 10, 2026 09:08 PM

Google News

13

UPDATED : மார் 10, 2026 09:15 PM ADDED : மார் 10, 2026 09:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரானின் போர்க் கப்பல்களை கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பதே அதிக மகிழ்ச்சி தருகிறது, என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து வருகின்றன. இது, 11வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இப்போரில் இருதரப்பும் சரமாரியாக தாக்கி வருகின்றன.

இந்நிலையில், ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பந்தர் லெங்கே கடற்கரைக்கு அப்பால் ஈரானின் , ஷாஹித் சுலைமானி என்ற அதிநவீன போர்க் கப்பல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரானிய கடற்படை கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

நடந்து வரும் மோதலில் அமெரிக்க படைகள், ஈரானிய கப்பல்களை மூழ்கடித்து வருகின்றன. ஈரானிடம் தற்போது கடற்படை என்று எதுவும் இல்லை. அனைத்தும் கடலுக்கு அடியில் கிடக்கின்றன. ஈரானிய கடற்படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

கப்பல்களை கைப்பற்றுவதை காட்டிலும் அவற்றை மூழ்கடிப்பதே சிறந்தது; மூழ்கடிப்பதே அதிக மகிழ்ச்சி. அதுவே பாதுகாப்பு என எங்கள் படையினர் தெரிவிக்கின்றனர். இப்போரில் ஈரானின் ராணுவ கட்டமைப்பிற்கு ஒரு சக்திவாய்ந்த அடி கொடுக்கப்பட்டு வருகிறது.

எங்கள் நட்பு நாடான இஸ்ரேலுடன் இணைந்து தொழிலநுட்ப திறன் மற்றும் ராணுவ பலத்தின் அபரிமிதமான வெளிப்பாட்டின் வாயிலாக எதிரியை நசுக்கி வருவது இப்போது அனைருக்கும் தெரிந்திருக்கும். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை திறன்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us