சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!
சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!
ADDED : நவ 05, 2024 03:51 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
இது குறித்து அந்த மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
இங்கு 275 மனித வள மேம்பாடு தேசிய ஆணையம் பள்ளிகள், 541 ஆரம்ப பள்ளிகள், 2,200 பெண்கள் சமூக பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை.
இந்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொடுப்பது ரூ.21 ஆயிரம் தான். அதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை.
அரசிடம் இருந்து நிதி வராததால், ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றார்.
ஆசிரியர்கள் கூறுகையில், பல பள்ளிகளுக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. தேவையான நிதி, அரசிடமிருந்து பள்ளி நிர்வாகத்திற்கு வராததால், வாடகை செலுத்த இயலவில்லை.
முறையான ஊதியம் இல்லாததால் பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியம் அளிக்காவிட்டால் மேலும் பள்ளிகள் மூடப்படம் அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிப்புக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.