UPDATED : டிச 24, 2024 08:29 PM
ADDED : டிச 24, 2024 06:06 PM

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சின்னமாக விளங்கும் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
பாரிஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஈபிள் கோபுரம். பிரான்ஸ் நாட்டின் பெருமைமிகு சின்னமாக கருதப்படும் இந்த கோபுரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.
இன்று இந்த கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தின் எலிவேட்டர் ஷாப்டில் தீப்பற்றிக் கொண்டது. தீயணைப்பு வீரர்கள், தீப்பற்றி எரியும் இடத்துக்கு அருகே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையடுத்து அசம்பாவிதம் தவிர்க்க, ஈபிள் கோபுரத்திலும், அதன் அருகேயும் இருந்த சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது.