தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ 'இது போருக்கான காலம் இல்லை பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்'

 'இது போருக்கான காலம் இல்லை பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்'

 'இது போருக்கான காலம் இல்லை பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்'


ADDED : ஜூன் 12, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோபியா: ''உலகம் தற்போது மோதல்கள், பொருளாதார அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் மிகவும் நிச்சயமற்ற கட்டத்தில் உள்ளது. இது, போருக்கான காலம் இல்லை; பேச்சு மற்றும் துாதரக உறவு மட்டுமே பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு,'' என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்; முதல் நாடாக பல்கேரியாவுக்கு நேற்று முன்தினம் சென்றார்; பல்கேரிய பிரதமர் ரூமன் ராதேவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் வெலிஸ்லாவா பெட்ரோவா-சமோவா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.

இந்தியா - பல்கேரியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவு களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வர்த்தகம், முதலீடு, மருந்து பொருட்கள், செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

உலகம் மிகவும் நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. இது, போருக்கான காலம் அல்ல.

பேச்சு மற்றும் துாதரக உறவு மட்டுமே தீர்வு தரும். பொருளாதார ஆபத்துகளை களைய என்ன வழி என கேட்டால், அதற்கு நெகிழ்வான வினியோக தொடரமைப்பு மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவை தான் பதில்.

பயங்கரவாதத்தை பொறுத்தவரை, உலகம் சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்,

இவ்வாறு அவர் பேசினார்.

பல்கேரியா பயணத்தை முடித்துக்கொண்டு, மற்றொரு ஐரோப்பிய நாடான பின்லாந்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us