ADDED : ஜன 11, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நைரோபி: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடற்கரை நகரமான மலின்டியில் இருந்து பைலட் மற்றும் இரண்டு பேருடன், சிறிய விமானம் நைரோபி விமான நிலையத்திற்கு நேற்று புறப்பட்டது.
புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து விமானம் அங்கிருந்த கட்டடத்தில் மோதி நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அப்போது சாலையில் பைக்கில் சென்ற பெண் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியதை உணர்ந்த பைலட் உள்ளிட்ட மூவரும், முன் கூட்டியே பாராசூட் வாயிலாக விமானத்தில் இருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.