போரை முடிவுக்கு கொண்டு வர : மோடியை மீண்டும் அழைக்கும் ஜெலன்ஸ்கி
போரை முடிவுக்கு கொண்டு வர : மோடியை மீண்டும் அழைக்கும் ஜெலன்ஸ்கி
ADDED : செப் 25, 2024 08:57 PM

கீவிவ்: ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர இரண்டாவதாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ‛குவாட்' அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது உக்ரைன் -ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
முன்னதாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு சென்று இரு நாட்டு அதிபர்களையும் சந்தித்து ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு வரும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று ( செப்.,25) உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, இரண்டாவது மாநாடு நடத்த பிரதமர் மோடி, மற்றும் பிற நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும்இவ்வாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.