மூச்சு விடுவதில் அவதியுறும் போப் பிரான்சிஸ்: ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை
மூச்சு விடுவதில் அவதியுறும் போப் பிரான்சிஸ்: ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை
ADDED : பிப் 17, 2025 10:32 PM

ரோம்: மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்சின் தற்போதைய மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக 2022ல் முழங்கால் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர். 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதியுற்றார். கடந்த 14-ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு குழாயில் அழற்சி ஏற்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக டாக்டர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனையிலயே போப்பிற்கு சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாரந்தோறும் புதனன்று போப் பிரான்சிஸ் பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருவதாகவும், வரும் புதன் கிழமை அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.