தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வி

 உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வி

 உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வி


ADDED : ஜன 26, 2026 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீவ்: உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இரு நாட்கள் நடந்த முதல் முத்தரப்பு பேச்சு தோல்வியில் முடிந்தது.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் 'நேட்டோ' எனப்படும் சர்வதேச ராணுவ படைகள் உதவுகின்றன.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்தார். அதற்காக அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் வி ளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்; அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக முதல் முறையாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடந்தது.

உக் ரைன் சார்பில் அதிபர் அலுவலக இயக்குநர் கிரில் புடானோவ், பாதுகாப்பு கவுன்சில் செயலர் ருஸ்டெம் உமெரோவ் பங்கேற்றனர்.

ரஷ்யா தரப்பில் ராணுவ இயக்குநரக தலைவர் இகோர் கோஸ்ட்யுகோவ் பங்கேற்றார். அமெரிக்காவில் இருந்து சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் கலந்து கொண்டார்.

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நிபந்தனைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தனர்.

பேச்சு நடந்துகொண்டிருந்த போதே 23ம் தேதி இரவு உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்யா 375 ட்ரோன்கள் மற்றும் 21 ஏவுகணைகளை வீசியது. இதை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கடுமையாக கண்டித்தார். 'ரஷ்ய அதிபர் புடின் பேச்சு நடத்துவதற்கு தகுதியற்றவர். அவர் நீதிமன்ற கூண்டில் இருக்க வேண்டியவர்' என குறிப்பிட்டார்.

இந்நிலையில், முத்தரப்பு பேச்சு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், இந்த பேச்சு ஆக்கப்பூர்வமானது என்றே உக்ரைன் தரப்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us