sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

/

டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

2


ADDED : நவ 25, 2025 03:08 PM

Google News

2

ADDED : நவ 25, 2025 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், 28 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை முன் மொழிந்தார்.

இந்த திட்டத்தை நவ.27ம் தேதிக்குள் ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் அந்நாடுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தப் போவதாக டிரம்ப் கெடு விதித்து இருந்தார்.

இந் நிலையில், டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது;

டிரம்பின் திட்டம் அமைதியை நோக்கி எடுக்கப்படும் சரியான முயற்சி. இருப்பினும், இந்த திட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.

அமைதி திட்டம், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக மாற்றப்பட வேண்டும். மேலும், இந்த திட்டம் ரஷ்யர்களுக்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது பற்றிய ஒரு யோசனையை தருகிறது.

ரஷ்யாவுடன் அமைதி ஏற்பட்டால் உக்ரைனின் முதல் செயல், அதன் ராணுவத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கும். முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துகள் ஐரோப்பாவில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்பதை ஐரோப்பா மட்டுமே தீர்மானிக்க முடியும்.

இவ்வாறு மேக்ரான் கூறினார்.






      Dinamalar
      Follow us