நம் இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்று பிணைப்பு இருக்கிறது: டிரம்ப் குடியரசு தின வாழ்த்து
நம் இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்று பிணைப்பு இருக்கிறது: டிரம்ப் குடியரசு தின வாழ்த்து
UPDATED : ஜன 26, 2026 05:44 PM
ADDED : ஜன 26, 2026 05:23 PM

வாஷிங்டன்: அமெரிக்காவும், இந்தியாவும் வரலாற்று பிணைப்பால் பிணைக்கப்பட்ட கூட்டாளிகள் என்று இந்திய குடியரசு தினத்திற்கு டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 77வது குடியரசு தின விழா வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டில்லியில் கடமைப்பாதையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது, தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஆப்பரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது;
உலகின் மிக பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்கிற முறையில் நம் இரு நாடுகளுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பு இருக்கிறது. அமெரிக்க மக்கள் சார்பில் இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வரும் ஆண்டில் நமது இலக்குகளை முன்னேற்றுவதற்கு இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

