இந்தியாவுக்கு சாதகமாக ஆட்சி நடத்தும் டிரம்ப் நிர்வாகம்: கருத்துக்கணிப்பில் தகவல்
இந்தியாவுக்கு சாதகமாக ஆட்சி நடத்தும் டிரம்ப் நிர்வாகம்: கருத்துக்கணிப்பில் தகவல்
ADDED : பிப் 13, 2025 07:08 AM

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். மெக்சிகோ, கனடா மற்றும் சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது பல்வேறு நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்தாலும், அது இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே அமெரிக்கா அனுப்பிய நிலையிலும், 13 சதவீதம் பேர் டிரம்ப் நிர்வாகம், இந்தியாவுக்கு சாதகமானதாகவே இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, 31 சதவீதம் பேர் டிரம்ப்பின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் 32 சதவீதம் பேர் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததால், இந்தியாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.
அதேவேளையில், 9 சதவீதம் பேர் டிரம்ப்பின் ஆட்சி மோசமானதாக இருப்பதாகவும், 7 சதவீதம் பேர் நாட்டிற்கு பேரிடர் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.