நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி
நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி
ADDED : மே 31, 2024 08:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: நடிகைகக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவருக்கான தண்டனையை கோர்ட் பின்னர் அறிவிக்கும். அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும்.
பல பெண்களுடன் டிரம்ப் உல்லாச வாழ்க்கை நடத்தியதாகவும், இதனை மறைக்க சில பெண்களுக்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்டார்மி டேனியல் என்ற நடிகைக்கு தேர்தல் நிதியை தானமாக அளித்தது குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் டிரம்ப் சிக்கினார்.